--- --:--:-- --

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்..!

7

இதுவரை கொரொனா உலகில் ஒரு கோடியே 56 லட்சம் பேரை பாதித்துள்ளது. இதில் சினிமா பிரபலங்களும் அரசியல்வாதிகளும் அடங்குவார்கள். தமிழகத்திலும் சில அமைச்சர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகி பின்னர் அவர்கள் நலமடைந்து வீடு திரும்பினர்.

 

அதன் பின் சினிமா துறையை சேர்ந்த பாலிவுட் பிரபல நடிகர்களான அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களின் குடும்பத்திற்கு சோதனை செய்யப்பட்டது.

 

அதற்குப் பிறகு பிரபல நடிகையும், அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இவ்வாறு பிரபலங்களையும் விட்டுவைக்காத கோரொனா , ஹாலிவுட் சினிமாவில் சேர்ந்த 64 வயதான சூப்பர் ஸ்டார் நடிகர் மெல் கிப்சன் என்பவருக்கு கொரொனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு ஒரு வாரம் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின் கொரொனா பரிசோதனையை மேற்கொண்ட பின் அவருக்கு தோற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon