ஒரே நாளில் பிரபலமான சிலம்பம் சுற்றும் பாட்டி..! சோனு சூட் கூறியது என்ன?
பாலிவுட் பிரபலங்களின் வீடியோ பகிர்வால் உலக சுகாதார அமைப்பின் பாராட்டை பெற்றுள்ள பாட்டி. சாலையில் பார்த்த காட்சி தன்னை பிரமிப்பில் ஆழ்த்தவே உடனே அதை செல்போனில் பதிவு செய்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா சிங்.
ஆனால் அப்போது அவருக்கு தெரியவில்லை தான் பதிவிட்ட வீடியோ இவ்வளவு பாராட்டைப் பெறும் என்று, மத்திய பிரதேச மாநிலம் புனேவில் சேர்ந்தவர் 85 வயது சாந்தாபாய் பவார் என்ற மூதாட்டி. புனைவில் குடிசைப் பகுதியில் வசித்து வரும் இந்த மூதாட்டி பல்வேறு பணிகள் செய்திருந்தாலும் வயது மூப்பு காரணமாக வேறு வேலை கிடைக்காமல் தன் தந்தையிடம் பயின்ற சிலம்பக் கலையை கொண்டு தனது வாழ்வாதாரத்தை உறுதி செய்து கொண்டார்.
கொரொனா காலத்தில் வெளியே செல்ல முடியாமலும் வேறு எந்த வேலையும் கிடைக்காததால் சிலம்பக் கலையை கொண்டு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சிலம்பம் சுற்றி அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனக்கும் தன் வீட்டின் அருகில் வசிக்கும் ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறார்.
இப்படியாக ஒரு நாள் புனேவின் நகர்ப் பகுதிகளில் மூதாட்டி சிலம்பம் சுற்றியதை தற்செயலாகப் பார்த்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா சிங் அதனை படம் பிடித்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டார். அந்த பதிவை பிரபல பாலிவுட் நடிகர்கள் சோனு சூட் மற்றும் ரித்தேஷ் தேஷ் முக் பகிர்ந்தனர்.
மேலும் மூதாட்டியை கொண்டு தற்காப்பு பயிற்சி பள்ளி நடத்த இருப்பதாகவும் சோனு சூட் கூறியுள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் மூதாட்டியின் செயலை கண்டு வியந்துபோன உலக சுகாதார அமைப்பு அவரை பாராட்டியுள்ளது.






