தமிழகத்தில் செப்டம்பரில் இடைத்தேர்தல் நடக்கப்போகிறதா?
இந்தியாவில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாராளுமன்ற ,சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு இதுபற்றி கூறுகையில் குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை எனவும், செப்டம்பர் 7-ந் தேதிக்கு பிறகு தேர்தல் நடத்த தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.






