வாஷிங்டன் நகரில் பேஸ்பால் விளையாட்டை தொடக்கி வைத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மரியானோ ரிவேரோ!
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பேஸ்பால் விளையாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரபல வீரர் மரியானோ ரிவேரோ பங்கேற்று விளையாடினர். ஆண்டுதோறும் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் போட்டிகள் கொரொனா அச்சுறுத்தல் காரணமாக 4 மாதம் தாமதமாக தொடங்கியது.
நடப்பு சாம்பியன்களான வாஷிங்டன் நேஷனல்ஸ் மற்றும் நியூ யோர்க் யங்கீஸ் இடையேயான சீசனின் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பு சிறப்பு விருந்தினர்களாக அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மரியானோ ரிவேரா பங்கேற்றனர்.






