--- --:--:-- --

கலை, அறிவியல் படிப்பில் சேர ஆன்லைனில் இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம்..!

11

தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள 93 ஆயிரம் இடைநிலை படிப்புகளுக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 

கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் www.tngasa.in, www.tndceonline.org இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதேபோல 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு www.tngptc.in, www.tngptc.com என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் முதன்முறையாக கலை அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் முறை அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பல கல்லூரிகளுக்கு தனித்தனியே விண்ணப்பிக்கும் முறை முடிவுக்கு வந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon