--- --:--:-- --

தென்காசியில் 34 லட்சம் பணத்துடன் சிக்கிய இளைஞர்கள் விடுவிப்பு…!

13

தென்காசி அருகே ஹவாலா பணத்துடன் பிடிபட்ட இரண்டு இளைஞர்களையும் வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறையினர் விடுவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் விபத்துக்குள்ளான வாகனத்திலிருந்து ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

வாகனத்தில் வந்தவர்கள் அத்தனை எடுக்காமல் தப்பி சென்றனர். போலீஸ் சோதனையில் கட்டு கட்டாக 34 லட்சம் ரூபாய் கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பணம் யாருடையது என்று தெரியாமல் இருந்த நிலையில் ஆலங்குளம் போலீசார் மிக ரகசியமான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதனிடையே கேரளாவில் பூகம்பத்தை கிளப்பியுள்ள தங்க கடத்தல் வழக்குக்கும், இந்த தொகைக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக கேரள போலீசாரும் ஆலங்குளத்தில் ரகசிய விசாரணையை தொடங்கி உள்ளதால் பரபரப்பு அதிகமாகியுள்ளது.

 

இந்த நிலையில் இளைஞர்கள் இருவர் மீதும் எந்த வழக்கும் போடாமல் காவல்துறையினர் விடுவித்து இருக்கின்றனர். எனவே இந்த பணம் யாருடையது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வழக்கின் முக்கிய புள்ளிகள் சிலரின் கைவரிசை இருக்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon