உயிருக்கு போராடிய 3 மாத குழந்தையை காப்பாற்றிய காவலர்கள்..!
அமெரிக்காவில் மூச்சுத்திணறல் காரணமாக உயிருக்கு போராடி மூன்று வாரங்களே ஆன குழந்தையை காவலர் ஒருவர் காப்பாற்றியது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். மெர்சிகன் பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் தனது மூன்று மாதம் நிறைந்த குழந்தைக்கு பாலூட்டிய போது திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவு இழந்தது.
இதனால் செய்வதறியாது கதறி அழுத தாய் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த காவலர் கேம்ருன் என்பவர் குழந்தை உயிருக்கு போராடுவதை அறிந்தார். அப்போது குழந்தைக்கு உரிய முதலுதவி கொடுத்து கேமரூன் காப்பாற்ற முயன்றார். அதனைக் கண்ட குழந்தையின் தாய் கதறி அழுதார்.
இறுதியில் குழந்தைக்கு நினைவு வந்த பின்னரும் மேல்சிகிச்சைக்காக குழந்தையையும் தாயையும் காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.






