--- --:--:-- --

17 வயது சிறுமி கர்ப்பம்..! சைல்டு லைன் அமைப்பிற்கு அளிக்கப்பட்ட புகார்..!

8

கொடைக்கானலில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பூம்பாறை பட்டாளம்மன் தெருவை சேர்ந்த ரவி என்ற இளைஞன் இதே பகுதியை சேர்ந்த உறவுக்கார சிறுமியிடம் நட்பாக பழகி வந்துள்ளார். நெருக்கம் அதிகரித்ததால் சிறுமி கர்ப்பம் ஆன நிலையில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க பட்டுள்ளது.

 

இந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் போது 17 வயது சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரியவந்ததையடுத்து சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சைல்டு லைன் அமைப்பினர் புகாரின் பேரில் கொடைக்கானல் மகளிர் போலீசார் ரவியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon