--- --:--:-- --

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்திய எல்லைகளை ஆய்வு செய்ய வருகிற 17, 18 இல் பயணம்..!

4

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி ஆகியோர் வருகிற 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் செல்கிறார்கள். நாளை மறுநாள் லே சென்றடையும் ராஜ்நாத் சிங் லடாக்கை ஒட்டியிருக்கும் இந்திய – சீன எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள முன்களப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

 

பின்னர் 18 ஆம் தேதி ஸ்ரீநகர் செல்லும் அவர் இந்திய-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஆய்வு செய்கிறார். இந்த பயணத்தின்போது ராணுவத்தளபதி எம்எம் நரவனே உடன் செல்கிறார். இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் எதுவும் இல்லை.

 

எனினும் எல்லை பிரச்சினையில் இந்தியா சீனா இடையே நிலவி வந்த பதற்றம் தணிந்து வரும் நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதியின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon