--- --:--:-- --

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பில் 91.46% மாணவர்கள் தேர்ச்சி!

3

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 91.46 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் .36 சதவீதம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு பதினெட்டு லட்சம் மாணவர்கள் எழுதிய சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகின.

 

மொத்தம் 18 லட்சத்து 73 ஆயிரத்து 15 பேர் தேர்வு எழுதியதில், 17 லட்சத்து 13 ஆயிரத்து 121 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பொதுத் தேர்வை எழுதியவர்களில் மாணவர்கள் 90 .14 சதவீதம், பேரும் மாணவிகள் 93.31 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 91.46 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் 0.36 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் 99.28 சதவீதத்துடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடமும், 98.95 சதவீதத்துடன் சென்னை மண்டலம் இரண்டாவது இடமும், பெங்களூரு மூன்றாவது இடமும் பெற்றுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon