--- --:--:-- --

சி‌பி‌எஸ்‌இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு..!

11

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதி உள்ளனர். அவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை இன்று தெரிந்து கொள்ளலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

 

cbseresults.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள சிபிஎஸ்இ நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும் என்பதால் மாணவர்கள் தங்களது பள்ளிகளில் இருந்து தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon