தமிழக மாவட்டங்களில் விர்ரென உயரும் கொரோனா…மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை நெருங்கியது…மதுரையில் உச்சகட்ட ஆட்டம்
தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு 15 லட்சத்தை எட்ட உள்ளது. இன்றும் சென்னையில் தொற்று குறைந்து 1,078 ஆக பதிவான நிலையில் மதுரையில் பாதிப்பு விர்ரென உயர்ந்து கொண்டே செல்கிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.சென்னையில் சுழன்றடித்த கொரோனா சூறாவளி இப்போது, தமிழகத்தின் பிற மாவட்டங்களில், குறிப்பாக மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மையம் கொண்டு பீதியை கிளப்பி வருகிறது. தமிழகத்தில் இன்று 4526 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 1,47,324 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2099 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கையும் 4,743 ஆக உயர்ந்து இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 97,270 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று மேலும் குறைந்து 1078 ஆக பதிவாகி, சென்னையில் மொத்த எண்ணிக்கை 79,651 என உயர்ந்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் இன்றும் அதிகபட்சமாக 450 பேருக்கு பாதிப்பு உறுதியாகி, மொத்த எண்ணிக்கை 6990 ஆக உயர்ந்துள்ளது.திருவள்ளூரில் 360 , கோவையில் 188,காஞ்சியில் 171 என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று தொற்று பாதிப்பு 100 ஜ கடந்து பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரையிலும் தினசரி பாதிப்பில் சென்னையில் மட்டும் முக்கால் பங்கு பதிவாகி வந்த நிலையில், இன்று சென்னையை விட மற்ற மாவட்டங்களில் 3 மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






