--- --:--:-- --

சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபே மாதம் 1 கோடி ரூபாய் வரை சம்பாதித்ததாக தகவல்

14

என்கவுன்டரில் கொல்லப்பட்ட தாதா விகாஸ் துபே மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும் அதை எப்படி அவன் செலவிட்டான் என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 8 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட அவனை மத்திய பிரதேசத்தில் இருந்து பிடித்து உத்திரபிரதேச மாநிலம் கான்பூருக்கு பத்தாம் தேதி அழைத்து வரப்பட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

 

இந்த நிலையில் அமலாக்கத்துறையின் மேற்கோள்காட்டி ஹிந்துஸ்தான் பத்திரிகை வெளியிட்டிருக்கும் செய்தியில் மாதம் 90 லட்சம் முதல் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் வரை விகாஸ் துபே சம்பாதிப்பதாகவும் ஆனால் சாதாரண உடையோடு வாழ்ந்ததாகவும் வங்கிக் கணக்குகளிலும் போதிய பணம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

 

அதோடு புகைப் பழக்கம் மதுபானம் போன்ற பழக்கங்களும் அவனுக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து கூட்டாளிகள் வங்கி கணக்குகள் பிற பரிவர்த்தனைகள் விகாஸ் துபேக்கு நெருக்கமான தொழிலதிபர் போன்ற நிதி முதலீட்டாளர்கள் குறித்து அமலாக்கத் துறையினர் விசாரிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon