--- --:--:-- --

ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட அமெரிக்க நடிகை..!

2

அமெரிக்காவின் கலிபோர்னியா ஏரியில் மாயமான நடிகை 5 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார். ஃபாக்சன் இசை, நகைச்சுவை தொடரான கிலேயில் 6 பாகங்களிலும் நடித்த நயாரி வேரா கடந்த எட்டாம் தேதி வெஞ்சிரா கவுண்டியில் படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து பயிறு ஏரியில் தனது 4 வயது மகனுடன் சவாரி சென்றிருந்தார்.

 

நீண்ட நேரம் படகு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பராமரிப்பாளர் சென்று பார்த்தபோது நயாரி வேராவின் மகன் மட்டும் படகில் உறங்கிக்கொண்டிருந்தான். இதையடுத்து நயாரி வேரா நீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடந்த 5 நாட்களாக ஹெலிகாப்டர், சோனார் கருவிகள் உதவியுடன் ஏரியில் மீட்புப் பணியினர் தேடி வந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

 

ஏரியில் நீச்சல் பயிற்சி செய்துவிட்டு தன் படகிற்கு திரும்பியதாகவும் தனது தாய் திரும்பவில்லை என்றும் நயாரி வேரா வின் மகன் தெரிவித்துள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon