ஓலையில் பள்ளி குழந்தைகளுடன் கல்வி கண் திறந்த காமராஜர் பனை தொழிலாளி அசத்தல்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் காமராஜர் தெருவில் வசித்து வருபவர் பால் பாண்டி, 65 வயதான இவர் பனை தொழிலாளி. பனைஓலை மூலமாக பலதரப்பட்ட உருவச்சிலையை செய்து வருகிறார்.இவர் கடந்த மூன்று வருடங்களாக அப்துல் காலம் சிலை,விவசாயி,பனை மரத் தொழிலாளி,தாஜ்மகால், கிறிஸ்தவ ஆலயம்,கோபுரம் உள்பட பல்வேறு உருவங்களைப் பனை ஓலை மூலம் பார்ப்பவர்கள் கவரும் வண்ணம் அசத்துவது இவருடைய வழக்கம் பல்வேறு கல்லூரிகள் மற்றும் மாநாடுகளில் கண்காட்சியாகவும் நடத்தி வந்துருக்கிறார்.
ஜூலை 15 நாளைய தினம் காமராஜர் 118 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காமராஜர் அவர்களின் வடிவில் செய்ய யோசனை தோன்றியது பெயரில் காமராஜர் அவருடன் இரண்டு பள்ளி குழந்தைகள் இருப்பது போலவும் ஓலையால் செய்து மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். கடந்த 2 மாதம் முயற்சிக்குப் பின் அவர் சிறுமி,சிறுவர் ஆகிய இரண்டு பள்ளி குழந்தைகள் புத்தக கட்டை தூக்கிக் கொண்டு பள்ளி செல்லும் காட்சியை தத்ரூபமாக பனை ஓலையில் உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து பால்பாண்டியிடம் கேட்டபோது நான் வருடந்தோறும் பல்வேறு உருவங்களைப் பனை ஓலையில் செய்து வருகிறேன். கல்விக் கண் தந்த காமராஜரைப் பள்ளி மாணவர்களோடு வைத்துப் பார்க்க வேண்டும் என ஆசை வந்தது. எனவே கடந்த 2 மாதமாக ராப்பகலாகப் பனைஓலையில் பள்ளி குழந்தைகளைச் செய்தேன்.
கொரேனா தொற்று நோய் காரணமாக ஊரடங்கு இருப்பதால் இந்த வருடம் காமராஜர் பிறந்த நாள் விழாவை கொண்டாட இயலவில்லை. ஆனாலும் பள்ளி குழந்தைகளோடு காமராஜரைச் சேர்த்துப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்றார். அவரது இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.







