--- --:--:-- --

இந்தியாவில் வாழ்ந்து வரும் ஒரே ஒரு கோல்டன் டைகர்..!

10

அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு தங்க நிற புலி படம் பிடிக்கப்பட்டுள்ளது. கப்பல் நிறுவனம் மேலாளரும் வன உயிரின புகைப்பட நிபுணருமான மயூரேஸ் என்பவர் காசிரங்கா வன பகுதியை சுற்றி வந்தபோது இந்த புலியை படம் பிடித்துள்ளார்.

 

அரிதினும் அரிதாக காணப்படும் இந்த புலி தற்போது இந்தியாவில் ஒன்று மட்டுமே உள்ளது. சாதாரண புலிகளை விட வெளிரிய பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த புலி மற்றவைகளை விட முக அமைப்பு சற்று மாறு பாடுகளை கொண்டது.

 

டாபி புலி என்றும், ஸ்ட்ராபெர்ரி புலி என்றும் இது அழைக்கப்படுகிறது. இவற்றின் உடலில் கருப்பு நிற கோடுகளுக்கு பதிலாக சிகப்பு மற்றும் பழுப்பு நிற கோடுகளையும்பொன்னிறமான ரோமங்களையும் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon