நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து கார்டூன் வெளியிடுவேன் எனக்கூறிய நபர்..!
நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து கார்டூன் வெளியிட உள்ளதாக முகநூல் பதிவிட்ட விழுப்புரத்தை சேர்ந்த ஓவியரை காவல்துறையினர் கைது செய்தனர். சுரேந்திர குமார் என்ற ஓவியர் தனது முகநூல் பக்கத்தில் நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து கார்டூன் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரியாஸ் அலி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் ஓவியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர்.







