இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்..!
தமிழகத்தில் கொரொனா தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனவே அதன் ஒரு பகுதியாக ஜூன் 15 ஆம் தேதி வரை அரசு மற்றும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ – பாஸ் கட்டாயம் என்ற நடைமுறையும் இருந்தது.
இந்த நிலையில் 15 ஆம் தேதிவரையிலான கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அதில் தமிழகத்தின் 31-ஆம் தேதி வரை அரசு, பொது போக்குவரத்து இயங்காது என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கொரொனா தொற்று பரவல் சவாலாக இருக்கும் நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் கொரொனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தொடங்கப்படும் புதிய தொழில்கள் மற்றும் கொரொனா சிறப்பு பணி, ஊரடங்கு தளர்வு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







