கடலில் மிதந்த 200கிலோ மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள்..!
இந்திய கடலோர காவல்படையினர் கடந்த சனிக்கிழமை அன்று ஆதர்ஷ் கப்பலில் ரோந்து பணியினை மேற்கொண்டனர். அப்போது மன்னார் வளைகுடா பகுதியில் ஏதோ மிதந்து வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
பின்னர் அருகில் சென்று பார்த்த போது மூட்டை வடிவில் இருந்துள்ளது. மிதந்து வந்த அந்த மூட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக அப்படையினர் கயிறு கட்டி கப்பலுக்குள் இழுத்துப் போட்டு உள்ளனர்.மொத்தம் ஐந்து மூட்டைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டன.
கடலில் மிதந்த 5 மூட்டைகளையும் ரோந்துப் படையினர் பிரித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் பார்த்த அப்படையினர்க்கு அதிர்ச்சி ஆம் அம்முட்டையுள் சுமார் 200கிலோ மதிப்புள்ள பீடி இலைகள் இருந்துள்ளன உடனடியாக அம்முட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்து தூத்துக்குடி சுங்கத்துறையில் ஒப்படைத்தனர்.
இந்த பீடி இலை மூட்டைகள் இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டு கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து கடலில் விழுந்து மிதந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.







