--- --:--:-- --

முககவசம் அணியாத நபரை தட்டி கேட்ட பெண் கொலை..!

13

ஆந்திர மாநிலம் குண்டூரில் சாலையில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த நபரை தட்டிக் கேட்டதற்காக தாக்கப்பட்ட 18 வயது இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். ரெம்டெசின் தலா என்ற கிராமத்தை சேர்ந்த பாத்திமா என்ற பெண்ணின் தாயார் வீதியில் முகக்கவசம் அணியாத அணைப்புரெட்டி என்பவருடன் தகராறில் ஈடுபட்டார்.

 

இதையடுத்து அந்த நபர் தனது கூட்டாளிகளுடன் பாத்திமாவையும், அவரது தாயாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பாத்திமா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon