--- --:--:-- --

தமிழகத்தில் ஏறுமுகத்தில் கொரோனா: புதிய உச்சமாக 4328 பேருக்கு பாதிப்பு… மொத்த உயிரிழப்பும் 2 ஆயிரத்தை கடந்தது

12.4

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் ஏறுமுகத்தில் உயரத் தொடங்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 4328 பேருக்கு பாதிப்பு உறுதியாகி, மொத்த உயிரிழப்பும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் ஆடு புலி ஆட்டம் போல் நாளுக்கு நாள் வித்தியாசப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் தொடர்ந்து சில நாட்களாக 4 ஆயிரத்திற்கு மேல் பாதிப்பு பதிவான நிலையில் அடுத்த சில நாட்கள் 4 ஆயிரத்திற்கும் கீழாக பதிவாகி வந்தது. இந்நிலையில் நேற்றும், இன்றும் மீண்டும் 4 ஆயிரத்தை கடந்து ஏறுமுகமாகி வருகிறது.

 

தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 4224 என்ற நிலையில் இன்றோ இதுவரை இல்லாத உச்சமாக 4328 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.  

 

இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,42,798 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது தான் ஆறுதலான விஷயமாக உள்ளது. 

 

இன்றையசென்னை பாதிப்பு நிலவரம் 1140 மட்டுமே ஆகும். ஆனால் மதுரை மாவட்ட நிலவரம் தான் தொடர்ந்து கலவரமாக உள்ளது. இன்று பாதிப்பு விர்ரென உயர்ந்து 464 ஆக உச்சம் தொட்டு உக்கிரமடைந்துள்ளது.

 
அடுத்தபடியாக திருவள்ளூரில் 337, செங்கல்பட்டில் 219 என பதிவாகியுள்ளது.தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

தமிழகத்தில் இன்றைய உயிரிழப்பு எண்ணிக்கை 66 ஆக பதிவான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து 2032 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3035 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon