--- --:--:-- --

சி‌பி‌எஸ்‌இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..!

11

சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டைவிட 5.38 சதவீதம் அளவுக்கு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 88.78 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.19 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.15 சதவீதமாகவும் உள்ளது.

 

நாட்டிலேயே அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 97.67 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பெங்களூர் மண்டலத்தில் 97.05 சதவீதம் பேரும், சென்னை மண்டலத்தில் 96.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

 

மொத்தம் 11 லட்சத்து 92 ஆயிரத்து 961 பேர் தேர்வு எழுதியதில் 38 ஆயிரத்து 686 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 95 சதவீதத்திற்கும் அதிக மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். கொரொனா காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட பாடங்களுக்கு மாற்று மதிப்பிடும் முறை பின்பற்றப்பட்டது.

 

எழுதாத தேர்வுகளுக்கு இன்டர்ணல், செய்முறை, ப்ராஜெக்ட் எழுதிய தேர்வுகளில் பெற்ற சராசரி மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் அளவுக்கு நிலைமை சீரடைந்த பிறகு விருப்பமுள்ள பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளவும் சிபிஎஸ்இ வாய்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon