--- --:--:-- --

கொரொனா இல்லாத பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அலைக்கழிப்பு..!

8

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து அவர்களை அலைக்கழித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து கொரொனா பாதித்த 6 பேர் டாயலிசிஸ் சிகிச்சைக்காக சிவகங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

 

கொரொனா நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சையை தொடங்காமல் அவர்களை மதுரைக்கு செல்லும் படி மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். தங்களை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் ராமநாதபுரம் சென்றுவிட்டதால் செய்வதறியாது தவித்த நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

 

மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கொரோனா நோயாளிகள் மீண்டும் ராமநாதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தொற்று இல்லாத பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அலைக்கழிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரொனா உறுதியான நிலையில் தொற்று இல்லாத பெண்ணும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு பட்டியலில் அந்தப் பெண்ணின் பெயர் இல்லாததால் நள்ளிரவில் மருத்துவமனை ஊழியர்கள் அவரை திருப்பி அனுப்பினர். பேருந்து வசதி இல்லாததால் நள்ளிரவில் அந்த பெண் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

Leave a Reply

Right Menu Icon