காதலன் பேச மறுத்ததால் தூக்கு மாட்டியபடி காதலனுக்கு வீடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்..!
ஆந்திர மாநிலம் நெல்லூரில் தன்னுடன் பேச மறுத்ததால் கழுத்தில் தூக்கு மாட்டியபடி காதலனுக்கு வீடியோ அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கல்லூரி மாணவியான ரம்யா என்பவரும் சிவ பாரக் என்ற இளைஞரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாகவும் கருத்து வேறுபாடு காரணமாக பேச்சுவார்த்தையை காதலன் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ரம்யா பல முறை கெஞ்சியும் சிவ பாரக் பேச மறுப்பதாக சொல்லப்பட்ட நிலையில் மின்விசிறியில் தூக்கு போட்டு அதை வீடியோவாக பதிவு செய்து சிவ பாரக் செல்போனுக்கு ரம்யா வீடியோ அனுப்பி வைத்துள்ளார்.
நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் உள்பக்கம் தாளிடப்பட்டு படுக்கையறை கதவை உடைத்து பார்த்தபோது ரம்யா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.







