--- --:--:-- --

கொரொனா வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

3

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி சோதனை நடத்தி வெற்றி பெற்றுவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த பல்கலை சொஸ்னோ பல்கலைக்கழகம் இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக கூறி உள்ளது.

 

இதன் மூலம் கொரொனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளதாக அந்த பல்கலைக் கழகத்தின் இயக்குனர் கூறியுள்ளார். கடந்த மாதம் 18 ஆம் தேதி இதற்கான சோதனை தொடங்கப்பட்டதாகவும் இவை வெற்றி பெற்றதால் முதல் குழுவினர் நாளை மறுநாளும், இரண்டாம் குழுவினர் 20ஆம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர்.

 

இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள கெமிலி இன்ஸ்டிடியூட் ஆஃப் எப்பிடமிர்ஜி அண்ட் மைக்ரோ பயாலஜி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon