கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெறும் வீடியோ..! பணியிடை மாற்றமா?
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை கிராம நிர்வாக அலுவலர் தன்னிடம் சான்று பெற வந்தவரிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வீடியோ வைரலாகும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அருணை நாதன் என்பவர் விவசாய கடன் பெற நிலச்சான்று கோரி கிராம நிர்வாக அலுவலர் சதாசிவனை அணுகிய போது அவர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு 200 ரூபாய் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் வீடியோ ஆடியோ பதிவாகியுள்ளது.
சதாசிவம் லட்சம் கேட்கக் கூடியவர் என்பதை முன்பே அறிந்ததால் தனது சட்டைப்பையில் செல்போன் கேமராவை ரகசியமாக ஆன் செய்து வைத்து இருந்ததாக கூறும் அருனைநாதன் அந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்ததோடு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளார் .
வீடியோ வைரல் ஆனதையடுத்து சதாசிவன் சமரச பேச்சுவார்த்தைக்கு முயன்றதாகவும் ஏழைகளை பாதிக்கும் லஞ்சத்தில் சமரசத்திற்கு இடமில்லை என்று கூறி அவரை திருப்பி அனுப்பியதாகவும் அருனைநாதன் கூறியுள்ளார். அவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.






