--- --:--:-- --

டிக் டாக் செயலியில் இருந்து ஊழியர்கள் வெளியேற அமேசன் நிறுவனம் உத்தரவு..!

12

டிக் டாக் செயலியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதால் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டுமென அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

 

அதில் டிக் டாக் வீடியோ பகிர்வு பயன்பாட்டை தங்கள் மொபைல் சாதனங்களில் இருந்து அகற்றுமாறு ஊழியர்களை கூறியுள்ளது. தங்களது நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பும் மொபைல் போன்களை டிக் டாக் செயலியைப் பயன்படுத்த கூடாது என்று குறிப்பிட்டுள்ள அமேசான் அவ்வாறு இருந்தால் அதனை உடனே நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

 

ஆனால் அதே நேரத்தில் லேப்டாப்பில் டிக் டாக் செயலியை பயன்படுத்துவதிலிருந்து விலக்கு அளிப்பதாகவும் அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon