--- --:--:-- --

11 ஆண்டுகளுக்கு புதைக்கப்பட்ட இளம்பெண்..! எலும்புக் கூட்டை தேடிய போலீசார்..!

4

திருச்சி மாவட்டம் முசிறியில் 11 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பெண்ணின் எலும்புக் கூட்டை போலீசார் பொக்லைன் இயந்திரத்துடன் தேடி அலைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தொட்டியத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு சாலை விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

 

அவர் குறித்த விவரங்கள் எதுவும் தெரியாததால் முசிறி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் காவிரி ஆற்றங்கரையில் போலீசார் அந்த உடம்பை புதைத்து விட்டனர். இது தொடர்பான வழக்கு முடிந்த நிலையில் தற்போது தொட்டியத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் 2009 ஆம் ஆண்டு விபத்தில் இறந்த அடையாளம் தெரியாத பெண்ணுக்கு உரிமை கோரியுள்ளார்.

 

அவர் தனது மகளாக இருக்கக்கூடும் என்றும் அதை போலீசார் நிரூபிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அந்தப் பெண்ணின் எலும்புக் கூட்டைத் தேடிக் கண்டுபிடித்து டிஎன்ஏ சோதனை செய்ய உத்தரவிட்டனர்.

 

இதனையடுத்து போலீசார் பொக்லைன் இயந்திரத்துடன் தேடி அலைந்தனர். கிடைத்த எலும்புக் கூடுகளை டிஎன்ஏ பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon