திருவாடானை மின்சார வாரிய அலட்சியத்தால் தொடர்ந்து மாடுகள் உயிரிழக்கும் அவல நிலை..!
திருவாடானை அருகே கோடனூர் ஊராட்சிக்குட்பட்ட T. கிளியூர் கிராமத்தை சேர்ந்த கணேசன். இவரது பசுமாடு ஒன்றும், காளை மாடு ஒன்றும் வழக்கம் போல் ஊருக்கு அருகில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் வயல் காட்டில் மேய்ந்து கொண்டிருந்தது.
அருகில் திருவாடானை மின் வாரியத்தால் சரிவர பராமரிக்காத மின்கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து மாடுகள் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மாடுகள் இறந்தன. தகவலறிந்து வந்த திருவாடானை காவல் துறையினர் வழக்கு பதிந்தனர். இறந்த மாடுகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது. கோடனூர் ஊராட்சி தலைவர் காந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இறந்த மாடுகளின் மதிப்பு 60 ஆயிரம் என தெரிவித்தார்கள். ஏற்கனவே அஞ்சு கோட்டையில் 5 மாடு, 2 நாய், கடம்பா குடியில், 2 மாடு, காடாங்குடியில் 5 ஆடுகள், என ஆடுமாடுகள் மின்சார வாரிய அலட்சியத்தால் இறந்துள்ளது என்பதும், மின்சார வாரியம், மின்கம்பங்களையும், மின்கம்பிகளையும் சரிவர பராமரிக்காததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். இறந்த மாடுகளின் விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள்.







