கொரொனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் அதிகரிப்பு..!
மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைத்து நடவடிக்கை காரணமாக கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரொனா சோதனையை தீவிரபடுத்தியதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட 30 மாநிலங்களில் உயிரிழந்தோர் சதவீதம் குறைவாக இருப்பதாகவும் டெல்லி, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத், ஒடிசா உள்ளிட்ட 18 மாநிலங்களில் குணமடைந்தோர் விகிதம் அதிகமாக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் விகிதம் 62.42 சதவீதமாகவும் உயிரிழந்தோரின் விகிதம் 2.72 சதவீதமாகவும் உள்ளது.







