--- --:--:-- --

இந்தியாவிற்குள் நுழைய டிக் டாக் போட்டுள்ள திட்டம்..! சீனாவை விட்டு வெயேறுகிறதா டிக் டாக் நிறுவனம்!

1

வேறு நாட்டிற்கு தலைமை இடத்தை மாற்றி இந்தியாவிற்குள் மீண்டும் நுழைவதற்கு டிக்டாக் நிறுவனம் புதிய திட்டம் வகுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா வைரசால் உலகமே திண்டாடிக் கொண்டிருக்க இந்தியாவுடன் லடாக் எல்லையில் உரச தொடங்கியது சீனா.

 

பல நாட்கள் பதற்றமான சூழல் நிலவிய சமயத்தில் கடந்த மாதம் சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் சீனாவிற்கு எதிரான குரல் இந்தியாவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 செய்த செயல்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

 

அமெரிக்காவை விட இந்தியாவில் இரு மடங்கு பயனாளர்களை கொண்டிருந்த டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் தாய் நிறுவனமான பைடான்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டது. இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து தற்போது ஆலோசித்து வருவதாக கூறியுள்ளது.

 

இரு நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையே உள்ள மோதல் போக்கே இதுபோன்ற முடிவுகளுக்குக் காரணம் என்று எண்ணிய பைடான்ஸ் நிறுவனம் சீனாவிடம் இருந்து விலகி இருக்க முடிவு செய்திருப்பதாக முடிவு செய்துள்ளது. இதற்காக வேறொரு நாட்டில் டிக் டாக் செயலிக்கான தலைமை இடத்தை அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

டிக் டாக் செயலியின் வியாபாரத்தை கருத்திற்கொண்டு நிர்வாக அமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தங்களது பயனாளர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்வதன் மகிழ்ச்சியான தளத்தை உருவாக்குவதுமே முதன்மை குறிக்கோள் என்று டிக் டாக் நிறுவனம் கூறியுள்ளது.

 

இருப்பினும் இந்தியாவிற்குள் டிக் டாக் செயலி நுழைய மீண்டும் இது போன்ற மாற்றங்கள் பாதை வகுக்குமா என்பது கேள்விக்குறியே.

Leave a Reply

Right Menu Icon