திருப்புவனத்தில் சிக்கிய கொலைக் கும்பல்..!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 11 பேர் கொண்ட கொலைக் கும்பல் திருப்புவனம் அருகிலுள்ள மாங்குளம் என்ற ஊரில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 11 கொடிய வாள் மற்றும் கடப்பாரை கத்தி மற்றும் 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இன்று காலை திருப்புவனம் காவல் நிலையத்திற்கு ஒரு கும்பல் பொதுமக்களை ஆயுதங்களை காட்டி மராட்டி வருவதாகவும் பணம் பறிப்பதாகவும் தகவல் வந்தது. இதை அடுத்து சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளர் கொரானா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளபடியால் ராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் உயர்திரு வருண்குமார் அவர்கள் தலைமையில் 3 தனிப் படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

அப்போது அந்த கும்பல் மாங்குடி மற்றும் மேல ராங்கியன் கண்மாய் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து. அங்கு சென்ற காவல்துறையினர் அங்கு இருந்த பதினோரு பேரில் 8 நபர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். இதில் மேலராங்கியத்தை சார்ந்த பெண் ஒருவர் ஆகும் இந்த பெண்ணின் தலைமையில் தான் விருதுநகர் மாவட்டம் கட்டனூரை சேர்ந்த ஒரு நபரை இந்த கும்பல் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இது காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த கொலை தடுக்கப்பட்டது. இந்த கும்பலை கைது செய்த காவல்துறை மூன்று அணியினருக்கு ராமநாதபுரம் காவல்துறை டிஐஜி அவர்கள் பரிசுத் தொகை வழங்கினார்.







