--- --:--:-- --

கொரோனா அச்சத்திற்கிடையே கிர்கிஸ்தானில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள்..!

9

கிர்கிஸ்தான் நாட்டில் மருத்துவம் பயின்று வரும் தமிழக மாணவர்கள் 700க்கும் அதிகமானவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். கொரொனா பொது முடக்கத்தால் வெளிநாட்டு விமான சேவையை இந்தியா நிறுத்தி வைத்திருக்கும் நிலையில் கிர்கிஸ்தானில் சிக்கியுள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தங்களை அழைத்து செல்ல விமானங்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் வருந்துகின்றனர். உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் தவிக்கும் தங்களை மீட்டுச் செல்ல தமிழக அரசும் இந்திய அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

கிர்கிஸ்தானிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லுமாறு தமிழக மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon