அமெரிக்காவிலும் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்ய பேச்சு வார்த்தை..!
அமெரிக்காவில் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜூன் 15ஆம் தேதி சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இதனிடையே இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்த நிலையில் சீன செயலிகள் பயன்பாட்டில் இந்தியாவிற்கு அடுத்து இரண்டாவது இடத்திலிருக்கும் அமெரிக்கா, டிக் டாக் உள்ளிட்ட சமூக ஊடக பயன்பாடுகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதிபர் டிரம்ப் அறிவிப்பதற்கு முன் எந்த ஒரு முடிவையும் அறிவிக்க தான் விரும்பவில்லை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ தெரிவித்துள்ளார். எனவே அமெரிக்கா – சீனா இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.







