--- --:--:-- --

பென்னிக்சை உள்ளாடையுடன் அடித்து சித்ரவதை செய்து கொலை..!

5.2

சாத்தான்குளம் விவகாரத்தில் பென்னிக்ஸ், ஜெயராஜை பார்க்காமலேயே சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு சரவணன் உத்தரவிட்டதாக மக்கள் கண்காணிப்பகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முதல் சிறை வளாகம் வரை நடைபெற்றது 10 சம்பவங்களாக விவரிக்கப்பட்டுள்ளன.

 

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மீது பென்னிக்ஸ் கைவைத்து தள்ளியதால் உள்ளாடையோடு நிறுத்தி இரு கைகளும் விரிக்கப்பட்ட நிலவியல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சில காவலர்கள் லத்தியால் பென்னிக்ஸ்சின் புட்டத்தில் சரமாரியாக அடித்ததாகவும் மகனை அடிப்பதை பார்த்த தந்தை ஜெயராஜ் கதறி அழுது கெஞ்சி கேட்டும் விடாத நிலையில் காவல்துறையினரை திட்டியதால் தந்தையையும் லத்தியால் ஒரு மணி நேரம் தாக்கியதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

இருவரும் அழுத சப்தம் காவல் நிலையத்திற்கு வெளியே கேட்டதாக வழக்கறிஞர் வேணுகோபால் என்பவர் கூறியுள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தை-மகன் இருவருக்கும் அரசு மருத்துவரிடம் மருத்துவ தகுதிச் சான்றிதழ் பெற்ற நிலையில் கைது நடவடிக்கைக்கு நீதிமன்ற நடுவர் சரவணன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இருவரையும் பார்க்காமலேயே 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon