சென்னையில் கொரோனாவுக்கு பலியான ஆயுதப்படை காவலருக்கு அஞ்சலி…!
கொரொனாவால் உயிரிழந்த ஆயுதப்படை காவலரின் உருவப் படத்துக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலராக பணி புரிந்த நாகராஜன் கொரொனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுப்பேட்டை ராஜ ரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், வடக்கு, தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர்கள் மற்றும் இணை ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நாகராஜனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.







