--- --:--:-- --

செமெஸ்டெர் தேர்வை செப்டம்பருக்குள் கட்டாயம் நடத்த வேண்டும்..!

2

நாடு முழுவதும் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் தேர்வுகளை இயக்க முடியாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று சாத்தியப்படுத்தும் போது பல்கலைக்கழகங்கள் சிறப்பு தேர்வுகளை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

 

மத்திய உயர் கல்வித்துறை செயலாளருக்கு மத்திய உயர்கல்வித் துறை அமைச்சகம் எழுதியிருக்கும் கடிதத்தில் நிலுவையிலுள்ள தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் நடத்த அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி இன் வழிகாட்டுதலின்படி இறுதியாண்டு தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் கட்டாயம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கொரொனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் விதிமுறைகளைப் பின்பற்றி தேர்வுகளை நடத்தலாம் என்றும் அந்த கடிதத்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கொரொனா பரவல் பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதத்திற்குப் பிறகு பல்கலைக் கழக தேர்வுகள் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தேர்வுகளை நடத்த மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon