தடை செய்யப்பட்ட பின்னரும் உலா வரும் டிக் டாக்…குறுக்கு வழியை பயன்படுத்தும் பயனர்கள்..!
சீன நிறுவனங்களின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் டிக் டாக் மீண்டும் பயன்பாட்டில் இருக்கிறது. குறுக்கு வழியில் அந்த செயலியை பயன்படுத்தி செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள். டிக் டாக் செயலி பல நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் டிக் டாக் செயலி இளம் தலைமுறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றது.
ஆட்டம் போட்டும் வசனத்திற்கும் செல்போன்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். டிக் டாக்கினால் குடும்ப பிரச்னை, சாதி மோதல் போன்றவை ஏற்பட்டு அந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று குரல் ஒரு பக்கம் ஒலிக்கத்தான் செய்தது. இந்த நிலையில்தான் லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் சீனாவின் டிக் டாக் , வீ ஷார்ட் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.
எனினும் மொழி அமைப்பில் மாற்றங்களை செய்து மீண்டும் சில நாட்களிலேயே பலர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே பதிவிறக்கம் செய்த டிக் டாக் செயலியில் துருக்கி மொழியை தேர்ந்தெடுத்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு மறுபடியும் ஆன் செய்தால் டிக் டாக் செயலி முன்பை போலவே இயங்குகிறது.
மேலும் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் அகற்றப்பட்டு இருந்தாலும் இணையதளத்தில் அதற்கான செட் அப் பைல்ஸ் கிடைப்பதாகவும் அதன் பயன்பாட்டாளர்கள் கூறுகின்றனர். டிக் டாக் செயலியை தடை செய்த பின்பும் தற்போது குறுக்கு வழியில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் டிக் டாக் பயன்பாட்டாளர்கள் உற்சாகத்துடன் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.






