--- --:--:-- --

பாவேந்தர் பாரதி தாசனின் ஒரே மகனான மன்னர் மன்னன் உயிரிழப்பு..!

7

புரட்சி கவிஞர் பாரதிதாசனின் மகனான மன்னர் மன்னன் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் வசித்து வந்த அவருக்கு 92 வயது நிரம்பியுள்ளது. கடந்த சில மாதங்களாக முதுமை சார்ந்த நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

 

இந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார். தமிழறிஞரான மன்னர் மன்னன் போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். புதுவை வானொலியில் பணியாற்றிய காலத்தில் தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் பல புதுமையான நாடகங்களையும் வழங்கியுள்ளார். அவரது தமிழ்ப் பணியை கௌரவிக்கும் வகையில் புதுவை அரசின் கலைமாமணி விருது, தமிழ்மாமணி விருது பெற்ற விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும் அவர் உயிரிழந்துள்ளார் .தமிழக அரசின் திருவிக விருதை பெற்றவர்என்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாள 50 நூல்கள் எழுதியுள்ளார். புதுவை தமிழ்சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர். நாளை மாலை 4 மணியளவில் இறுதி சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon