--- --:--:-- --

கொரொனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது – உலக சுகாதார அமைப்பு

9.1

கொரொனா வைரஸ் காற்றின் மூலமாகவும் பரவுவதாக கூறி உலக சுகாதார அமைப்பு தனது பரிந்துரைகளை மாற்ற வேண்டும் என நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் வேண்டுகோள் விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளவர்களின் வாய் மற்றும் மூக்கில் இருந்து வெளிப்படும் நீர்திவலைகள் மூலமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பு சொல்லி வருகிறது.

 

இந்த நிலையில் 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்புக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் காற்றில் பரவும் மிக நுண்ணிய வைரஸ் கூட மனிதர்களை பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கொரொனா பரவும் விதம் குறித்த அறிவுறுத்தலை உலக சுகாதார அமைப்பு மாற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

 

எனினும் கொரொனா வைரஸ் காற்றில் பரவுவதற்கு போதுமான ஆதாரம் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon