--- --:--:-- --

தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது..!

2

தமிழகம் முழுவதும் நாளை முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே அத்தியாவசிய பொருளான பால் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே நாளை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழுமுடக்கம் என்பதால் பெட்ரோல் பங்குகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

ஆம்புலன்ஸ், பால் மற்றும் அவசர சிகிச்சை வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இனி வருகிற ஜூலை 31-ஆம் தேதி வரை உள்ள ஞாயிற்றுக் கிழமைகள் அனைத்துமே முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்பட உள்ளது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon