--- --:--:-- --

கோப்ரா பட பாடலை கீபோர்டில் இசைத்த பிரபல சிறுமி சஹானா..!

3

விக்ரமின் கோப்ரா படத்தில் உள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை கீபோர்டில் இசையாக வாசித்த கண்பார்வையற்ற சிறுமியை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பாராட்டியுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் உருவான அந்த படத்தை அஜய் ஞாநமுத்து இயக்கியுள்ளார்.

 

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அந்த படத்துக்கு இசை அமைத்துள்ளார். படத்தில் உள்ள தும்பி துள்ளல் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியானது. அந்த பாடலை பிறவியிலேயே கண் பார்வையற்ற சிறுமி சகானா கீபோர்டில் வாசித்து வீடியோவை வெளியிட்டிருந்தார்.

 

அந்த வீடியோவை பார்த்து ஏ ஆர் ரகுமான் ட்விட்டரில் ஸ்வீட் என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். இதேபோல் படத்தயாரிப்பாளர் லலித்குமார் மைக் உள்ளிட்ட ஸ்டுடியோ செட் அப்பை பரிசாக கொடுத்துள்ளார். சிறுமி சகானா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்தவர் ஆவார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon