--- --:--:-- --

இது உங்க சோ இல்ல..உங்க வேலைய பாருங்க..என கூறிய வனிதா..! மன்னிப்பு கேட்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!

12

வனிதா விஜயகுமார் தமிழ்நாடு முழுவதும் பிக்பாஸ் மூலம் புகழ் பெற்றவர் இவர். இவருக்கு பீட்டர் பாலுடன் மூன்றாவதாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத் புகார் அளித்தார். பீட்டர் பால் தனது முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

எனவே இதைப் பார்த்த நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் டுவிட்டரில் கருத்தைத் தெரிவித்திருந்தார். அதாவது தற்போது தான் செய்தியை பார்த்தேன். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இன்னும் விவாகரத்து ஆகவில்லை படித்த ஒருவர் எப்படி இப்படி ஒரு தவறை செய்ய முடியும் அதிர்ச்சியாக இருக்கிறது.

 

வனிதா திருமணம் முடியும் வரை ஏன் முதல் மனைவி காத்திருந்தார். அவர் ஏன் திருமணத்தை நிறுத்த வில்லை. வனிதா நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டதாக அவரே தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் இந்த திருமணம் மூலம் அவர் செட்டில் ஆவார் என்று நாம் நம்பி இருந்தேன். ஆனால் இந்த இதை பார்த்த வனிதா உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

 

இது உங்கள் சோ இல்லை என் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும் என்று பதிலடி கொடுத்துள்ளார். இதையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவின் பெயரை குறிப்பிடாமல் ட்விட்டரில் கூறியிருந்தது ஒரு நேற்று என்னிடம் கூறியதாவது, மரியாதை இல்லாத ஒருவர் சட்ட மற்றும் சமூக விதிகளை ஏற்காத ஒருவர், உங்களை போலியானவர், தவறானவர், சீண்டிப் பார்ப்பவர் என்றால் அது தான் உங்களுக்கு கிடைத்த சிறந்த நடத்தைக்கு சான்று என்றார். மத சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் குழந்தைகளை கொடுமை படுத்துபவர்களை பாதுகாக்க முயற்சி செய்வோர், காசோலைகள், உயில்களில் போலி கையெழுத்து போடுவார் இதுதான் சிறந்த நடத்தைக்கான சான்று என தெரிவித்தார்.

 

லக்ஷ்மி ராமகிரிஷ்ணன் கூறியிருப்பது வனிதா விஜயகுமாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் கமண்ட் செய்திருக்கக் கூடாது. அதை பெரிதாக்கிய மீடியாவுக்கு நன்றி. உங்களைப் பற்றிய அனைத்து டிவீட்களையும் நீக்கி விட்டேன். நீங்கள் சொன்னது போன்று என் ஒரிஜினல் கடமையான பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்காக குரல் கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

 

அதை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவாளர்கள் நீங்கள் ஏன் வனிதாவிடம் பொது மன்னிப்பு கேட்கிறார்கள்,வனிதா அவ்வளவு பெரிய ஆளா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon