விஜயுடன் பேசுவதில்லை..விஜய் படங்களையும் பார்ப்பதில்லை எனக்கூறிய நெப்போலியன்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அங்கு ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். அவர் நடித்து முடித்துள்ள டெவில்ஸ் நைட் என்ற ஹாலிவுட் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதை அமெரிக்காவில் நேரடியாக ஓடிடி இணையதளங்களில் ரிலீஸ் செய்கின்றனர்.
எனவே அவர் நடித்து வரும் படங்களை விளம்பரப்படுத்துவதற்காக வீடியோ காலில் நெப்போலியன் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதில் விஜய் குறித்து பேசிய அவர் போக்கிரி படத்தில் பிரபுதேவா வற்புறுத்தி கேட்டதால் தான் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த படத்தில் நடிக்கும்போது விஜய்க்கும், நெப்போலியனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அப்போதிலிருந்தே விஜய்யுடன் பேசுவதில்லை எனவும் விஜயின் படங்களை பார்ப்பதில்லை எனவும் நெப்போலியன் கூறியுள்ளார்.
அதை தொடர்ந்து அஜீத்தை தனக்கு பிடிக்கும் எனவும் தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்களுடன் நடித்து விட்டேன் எனவும், அஜீத்துடன் மட்டும் நடிக்கவில்லை. எனவே அஜித்துடன் சேர்ந்து படம் நடிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். விஜய் உடன் முரண்பட்ட கருத்து குறித்து அவர் பேசி இருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






