தூத்துக்குடி பள்ளி விடுதி அறையில் ஆசிரியர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலி நகரைச் சேர்ந்தவர் தாசன் மகன் ஆல்வின் (36) இவர் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் பாதிரியாராகவும் ஆங்கில ஆசிரியராகவும் உள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 தினங்களுக்கு முன்னர் அவர் தூத்துக்குடி வந்துள்ளார்.
அங்கு அவர் பணிபுரியும், பள்ளியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாக அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த பள்ளி ஊழியர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது ஆல்வின், மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் காவல் ஆய்வாளர் அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆல்வினின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவதினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




