மருத்துவமனையில் ஆக்சிஜன் டாங்க் வெடித்ததில் 19 பேர் உயிரிழப்பு..!
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகினர். மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டேங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெடி விபத்து காரணமாக மருத்துவமனை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இந்த கோர சம்பவத்தில் 19 பேர் பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் பலர் சிக்கி இருக்கக்கூடும் என்பதால் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், மருத்துவமனையில் ஆக்சிஜன் டாங்கிகள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதால் அவை தொடர்ந்து வெடித்து சிதறி கொண்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.






