டிக் டாக்கிற்கு பதிலாக சிங்காரி..போதிய வரவேற்பு கிடைக்கவில்லை..!
இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டதன் விளைவாக மாற்று வழியைத் தேடி டிக் டாக் பிரபலங்கள் எங்கு செல்கின்றனர்? ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று வளர்ந்திருந்த டிக் டாக் செயலியை மத்திய அரசு தடை செய்து உத்தரவிட்டது டிக் டாக் பயனாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பொழுதுபோக்கு செயலியான டிக் டாக்கை இந்தியாவில் பல லட்சம் பயனாளர்கள் பயன்படுத்தி வந்தனர். இதில் பல பேர் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி பல்லாயிரம் லைக்குகளையும் பெற்றனர்.
டிக் டாக் அவலங்கள் தங்களுடைய வீடியோக்களை தொடர்ந்து பார்க்க தங்களை இன்ஸ்டாகிராமில் பின் தொடருமாறு தங்களுடைய ரசிகர்களுக்கு அறிவுறுத்தி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். மித்ரன் சிங்காரி போன்ற எண்ணற்ற செயலிகள் இருந்தாலும் அது போதிய வரவேற்பை பெறவில்லை.






