--- --:--:-- --

திருவாடானையில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது!

0.1

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாண்டுகுடியைச் சேர்ந்த 65 வயது முதியவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

 

இறந்த அவரது சடலத்தை சிவகங்கையில் இருந்து சொந்த ஊரான பாண்டுகுடிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சுகாதாரத்துறை கூறிய அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு அடக்கம் செய்வதற்கு முன்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடல் பாதுகாக்கப்பட்ட வாகனத்தில் திருவாடானை வழியாக சென்றால் இப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்தில் இருந்தனர். அதனைத் தொடர்ந்து திருவாடானை ஊராட்சி மன்ற தலைவர் இலக்கியா ராமு, ஒன்றிய கவுன்சிலர் செங்கை ராஜன், துணைத்தலைவர் மகாலிங்கம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருவாடானை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் நிலை அலுவலர் செங்கோல் ராஜ் தலைமையில் வீரர்கள் தீ அணைப்பு வாகனம் மூலம் திருவாடனை நகர் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Leave a Reply

Right Menu Icon