--- --:--:-- --

காசுக்காக பெற்ற குழந்தயை விற்ற தாய் அதிர்ச்சி அளிக்கும் சிவகங்கை !

காசுக்காக பெற்ற குழந்தயை விற்ற தாய் அதிர்ச்சி அளிக்கும் சிவகங்கை !

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர் காளையார்கோவில் அருகே உள்ள பள்ளிதம்பம் அலங்காரம் மகள் பிரியா ஏஞ்சலினுக்கும்,  2019ல் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. கடந்த மார்ச் 2020ல் தேவகோட்டை தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

அக்குழந்தை இறந்துவிட்டதாக கணவர் சங்கரிடம் மனைவி பிரியா ஏஞ்சலின் பொய்யான தகவலை கூறியுள்ளார். சந்தேகமடைந்த கணவர் விசாரிக்கையில் பிறந்த குழந்தையை தேவகோட்டை கீழச்செம்பொன்மாரியைச் சேர்ந்த காஞ்சனா விற்றது தெரிய வந்த நிலையில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் தகவல் தெரிவித்ததின் பேரில் குழந்தைகள் நலக்குழுவின் உத்திரவின் படி மாவட்ட சைல்டுலைன் இயக்குனர் ஜீவானந்தம், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தபாபு, ஆற்றுப்படுத்துனர்.

ஜூலியட்வனிதா, சிவகங்கை மாவட்ட மனித கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயா, பள்ளிதம்பம் ஊராட்சி செயலர் பூமயில், கிராம செவிலியர் சாந்தி, அங்கன்வாடி பணியாளர் தாமரைசெல்வி, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பள்ளிதம்பம் சென்று விசாரணை செய்து காஞ்சானாவிடமிருந்த மூன்று மாத குழந்தையை மீட்டு தற்காலிகமாக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon