கொரோனாவால் தபால் வாக்குக்கான வயது வரம்பு குறைப்பு!
கொரொனா வைரஸ் தொற்று பரவலால் தபால் ஓட்டு போடும் வயது வரம்பை குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரொனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில் பீகார் மாநில சட்டசபை ஆயுட்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைகிறது. அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் அங்கு தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரொனா வைரஸ் பாதிப்பு முதியோருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதால் தபால் வாக்கு செலுத்துவோரின் வயது 80 லிருந்து 65 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் தபால் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.







